பிரதான செய்திகள்

எதிர்காலத்தில் மின்சாரக் கார்களை மாத்திரமே இறக்குமதி செய்ய தீர்மானம்!

எதிர்வரும் காலத்தில் அனுமதி கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.

இனி, இந்த நாட்டில் அரசாங்கம் என்ற வகையில், முடிந்தவரை எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

wpengine

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

wpengine

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

wpengine