பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

எகிப்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 32 பேர் பலி!

மத்திய எகிப்தின், சொஹாக் மாகாணத்தின், தஹ்டா நகருக்கு அருகில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 32 பேர் பலியாகியுள்ளதுடன், 165 பேர் காயமடைந்துள்ளனர். 

அடையாளம் தெரியாத நபர்களால், ரயிலின் அவசர தடுப்புக் கட்டை இயக்கப்பட்டமையால் குறித்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது, குறித்த ரயிலுக்கு பின்னால் பயணித்த ரயில், அதனுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பானவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்குவதாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பட்டாஹ் அல்-சிசி (Abdul Fattah al-Sisi) தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம் நிறைவுற்றது!

Editor

அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு சட்ட நடவடிக்கை – லால்காந்த

wpengine

கோப்பாபிலவு முதல் கோப்பாவெளி வரை கையாலாகாத முஸ்லீம் அரசியல் – பாகம் 01

wpengine