பிரதான செய்திகள்

ஊழல் மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இருந்தால் அதனை சி.ஐ.டியினருக்கு வழங்க வேண்டும்.

நனோ நைட்ரிஜன் உர இறக்குமதியில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும், அதில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்புள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கடந்த பாராளுமன்ற அமர்வில் குற்றம்சுமத்தியிருந்தார். 

இந்நிலையில், ரோஹினி கவிரத்னவின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக சஷீந்திர ராஜபக்ஷ மறுத்துள்ளதோடு, அதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் இன்றைய (22) அமர்வில் கலந்துகொண்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த உர இறக்குமதியில் மோசடிகள் நடந்திருந்தால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் சார்பில் தான் சி.ஐ.டியினருக்கு அறிவித்துள்ளேன்.

இந்த ஊழல் மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியினருக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இருந்தால் அதனை சி.ஐ.டியினருக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Related posts

இலங்கை, இங்கிலாந்து மோதும் 4 ஆவது போட்டி இன்று

wpengine

இ.போ.ச.பஸ் கட்டணம் 6 வீதத்தினால் அதிகரிக்க உள்ளது.

wpengine

இலங்கையும் – மலேசியாவும் வியாபார நற்புறவைப் பேண உறுதி மொழி

wpengine