பிரதான செய்திகள்

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.


அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு வீதியிலோ அல்லது குறுக்கு வீதிகளிலோ வீடுகளிலிருந்து வெளியேறி இருப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் உத்தரவிற்கு அமைய செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டம் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படும் என அறிவுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை நாட்டிலுள்ள அரச மருந்தகங்கள் தவிர அனைத்து மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மறு அறிவித்தில் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மருந்தகங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்ட போதும், வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்து விற்பனை நிலையங்களையும் உடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


அத்தியாவசிய உணவு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக நாடு பூராகவும் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


குறித்த விற்பனை நிலையங்களை திறந்து வைத்து நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் LPL கிரிக்கட் போட்டி ஆரம்பமானது!

Editor

யாழ் இரவோடு இரவாக முளைத்த சிவலிங்கம்

wpengine

கூட்டுறவுத்துறையைப் பொறுப்பேற்ற பின்னர் வீண்விரயம் இடம்பெறவில்லை. அமைச்சர் றிசாட்

wpengine