பிரதான செய்திகள்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் மருந்தகங்களையும் திறக்க முடியும்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக, வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலிருந்து நாள்தோறும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் ஏராளமான நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு ஒரு விசேட திட்டத்தை வகுத்துள்ளது.

அதன்படி, அனைத்து மருந்தகங்களையும் அத்தியாவசிய தேவை கருதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நோயாளியின் மருத்துவ சான்றிதழ் மற்றும் மருந்து சீட்டை இதற்கான அனுமதிப்பத்திரமாக ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கருத்திற் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

மேலும், மருந்தகங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கும் மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் இதன்போது அனுமதி வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

Related posts

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine

ஓமந்தை வாகன விபத்தில் இளைஞன் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

Editor

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Editor