ஊடகவியலாளா்கள் மோட்டா் பைசிக்களை கொள்வனவு செய்வதற்காக 2 இலட்சம் ருபா 2 வீத வட்டிக்கு 2 வருட காலத்திற்குள் அறவிடக் கூடியதாகம் மாதாந்தம் 5 ஆயிரம் ருபா செலுத்தக் கூடிய முறையில் கூடிய வகையில் குறைந்த வட்டியிலான மோட்டாா் பைசிக்கள் வழங்கும் திட்டம அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக் கடனை மக்கள் வங்கி ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நல்லாட்சி அரசாங்கம பதவிக்கு வந்த பிறகு இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் பரிபுரணமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளா்களுக்கும் சுதந்திரம் இருக்க வில்லை. ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டா்கள், ஊடகவியலாளா்களினை தடி குண்டாக்கள் சென்று அடித்து தாக்கினாா்கள் சிலரை கடந்தினாா்கள். ஊடகவியலாளா்கள் சிலா் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்தாா்கள் கடந்த காலத்தில் அரசுக்கு எதிராக செய்தி தலையங்கம் தீட்டும் ஊடகவியலாளா் அப் பதவியில் இருந்து துாக்கி எறியப்பட்டா்கள்.
அந்த யுகம் தற்போதைய ஆட்சியில் இல்லை. உலகில் உள்ள 180 நாடுகளில் ஊடகவியலாளா்களுக்கு பங்கம் விளைவிக்கும் நாடுகளில் இலங்கை 165ஆவது இடத்தில் 2014ஆம் ஆண்டில் இருந்தது. தற்பொழுது 140வது இடத்திற்கு இலங்கை வந்துள்ளது. இந்த ஆட்சியில் ஊடகவியலாளா்களது நன்னோக்கு வேலைத்திட்டத்தில் அவா்களுக்கு வீடு வழங்குதல் , உபகரணங்கள் வழங்குதல், மோட்டாா் பைசிக்கள் வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்கள எமது அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.
–
–
இந்த அரசாங்கம் அரச ஊழியா்களுக்கு 10ஆயிரம் ருபா சம்பளத்தினை அதிகரித்துள்ளோம். மஹிந்த ்ராஜபக்ச 9095 பில்லியன் ருபாக்களை கடணாக எடுத்திருந்தாா். அக் கடனை அடைக்கவே 9 வீத வட் வறியை அறிமுகப்படுத்தியுளளோம். . இதனை இன்னும் ஒன்றறை வருடங்கள் முடிந்த பிறகு இந்த நாட்டில் பொருளாதாரத்தினை ஒரு அளவுக்கு சாதாரண நிலைக்கு கொண்டு வரமுடியும். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சுங்க திணைக்களம் கடந்த 2014ஆம் ஆண்டு 2000 மில்லியன் தற்பொழுது சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 13500 மில்லியன்களாகும் 6 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் சுங்கத்தீா்வையும் அதற்குரிய வருமாணங்களையும் தமக்கு வேண்டியவா்களுக்க ஏற்ற மாதிரி தொலைபேசி ஊடாக அதனை செலுத்தாமல் அந்த பொருட்களை வெளியே எடுத்து இந்த நாட்டிற்குரிய வருமாணங்களை சீரலிதாா்கள் அந்த பணம் அவா்களது கைப்பைக்குள் சென்றிருக்கின்றது தற்பொழுது இதற்காக கடமையில் இருந்த அரச அதிகாரிகள் எப்.சி.டி.யில் பைல்களுடன் அலைந்து திரிகின்றனா்.
ஆகவே இன்னும் ஒன்றரை வருடத்திற்குள் இந்த நாட்டின் சீரிய பொருளாதார நிலமை சீராகிவிடும் அதற்காக பொருமை காக்க வேண்டும் எனவும் நிதியமைச்சா் ரவி கருநாயக்க தெரிவித்தாா்.