பிரதான செய்திகள்

ஊடகவியலாளர்கள் சம்மந்தமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முறைப்பாடு! சுத்தம் செய்யும் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஊடகப் பிரிவில் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக (ஊடகம்) பதவி வகித்த நிமல் போபகே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து ஊடகப் பிரிவின் ஆலோசகராக பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பீ.லலித் டி சில்வா பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட எந்த பணிகளும் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இல்லை எனவும் அங்கு இருப்பதில் பயனில்லை என கூறி லலித் டி சில்வா, ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததுடன் அதற்கு அமையவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

லலித் டி சில்வா நுகேகொடையில் உள்ள ஹோட்டல் பாடசாலை ஒன்றின் உரிமையாளராவார்.

மேலும் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் புகைப்பட பிரிவு சம்மந்தமாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதில் பணிபுரியும் புகைப்பட ஊடகவியலாளர்கள் சம்மந்தமாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து ஜனாதிபதி புகைப்பட பிரிவு குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

போபகே ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (ஊடகம்) பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அந்த பதவிக்கு சரத் சந்திரசிறி என்ற அரச அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கரையோர மாவட்ட பிரச்சினை அமைச்சர் றிஷாட் அன்று சொன்னதை இன்று ஹரீஸ் தெரிவிக்கின்றார்.

wpengine

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்களை சந்தித்த றிஷாட்

wpengine

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனுமதி

wpengine