பிரதான செய்திகள்

ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது

சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக முழு ஊடகத்துறையை வலுவூட்டலும், வளர்ச்சியடைந்த ஊடக கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா ஒன்றினை நடத்த அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஊடகவியலாளர்களின் பல்வகை திறமைகள் மற்றும் விசேட நிபுணத்துவம் ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றை கௌரவிக்கவும் தொழில் ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்க வழிகாட்டி ஊக்குவிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையின் ஊடகவியலாளர்கள் நிறைவேற்று கடமைகள் மற்றும் அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையிலும் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுகளை 2018ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் இணையத்தளங்கள் உள்ளடங்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Related posts

வலி.தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பதவி பரிபோனது

wpengine

உழவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எரிபொருளை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

wpengine

சம்பத் வங்கியினை புறக்கணிக்குமாறு நான் கூறவில்லை

wpengine