பிரதான செய்திகள்

ஊடகவியலாளரை அச்சுருத்திய வவுனியா கிறிஸ்தவ பாதிரியார்

வவுனியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் “உமக்கு யார் அனுமதி வழங்கியது” என கேட்டு விரட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறுவர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் நிகழ்வு நடைபெறுவதாக குறித்த பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக ஊடகவியலாளர் ஒருவர் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த ஊடகவியலாளரை, வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் பாதிரியார் ஒருவர் “உமக்கு யார் அனுமதி கொடுத்தது?. இங்கே படம் எடுக்க அனுமதியில்லை. வெளியே செல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த ஊடகவியலாளர்,
“வவுனியாவில் பொதுவாக நடைபெறும் நிகழ்வுகளை செய்தியாளராகிய நாங்கள் பதிவிடுவது வழமை. சிறுவர்களின் நிகழ்வுகளை செய்தியாக பதிவிடும்போது அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

அந்தவகையில் குறித்த சிறுவர் நிகழ்வை செய்தியாக பதிவிடுவதை தடை செய்த கிறிஸ்தவ பாதிரியாரின் செயலானது வருத்தமளிக்கிறது” என தெரிவித்தார்.

Related posts

செலவு அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும் தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு.

Maash

கூட்டு எதிர்க்கட்சிக்கு பயந்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்தமுடியாது! பைஸர் முஸ்தபா

wpengine

அஸ்மின் அயூப்பிற்கு எதிர்ப்பு! ஆளும் கட்சி உறுப்பினர்கள்

wpengine