Breaking
Sat. Nov 23rd, 2024

ஊடகத்துறைக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் பிரேரணைக்கு மலையக மக்கள் சார்பில் என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். அம்மணிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிப்பூர தேர் பவனியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மலையகத்தைப் பொறுத்தவரை பின் தங்கிய நம் மக்களுடைய குறைகளை முன்னெடுத்து செல்வதற்கும் சர்வதேசத்திற்கு வெளிப்படையாக பல உண்மைகளை எடுத்துரைத்ததும் ஊடகமே. ஊடகத்துறைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு நடந்து கொள்வது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடைய கடமை.மேலும் 13 வது சீர்திருத்தம் அமுலாக்கப்படும் போது அதிகார பரவலாக்கம் எனும் போது வடகிழக்கு மக்களுக்கு மட்டுமின்றி மலையக மக்களுக்கும் இன்றியமையாதது.மலையகத்துக்கும் தமிழ் முதல் அமைச்சர்கள் தேவை காணி உரிமை, பொலிஸ் அதிகாரம் அனைத்தும் உள்ளாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

A B

By A B

Related Post