பிரதான செய்திகள்

ஊடகத்தில் உச்சத்தை தொட்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்

(இப்ராஹிம் மன்சூர்- கிண்ணியா)

அரசியலுக்கு ஊடகத்தின் பங்களிப்பானது அளப்பரியது அதில் பல்வேறு படித்தரங்கள் உள்ளன பத்திரிகை முதல் சமூகவளைத்தலங்கள் தொட்டு நேற்று (23) வானொலி தொலைகாட்சி என எல்லை இல்லாத துறையாக பரிணாமம் எடுத்துள்ளது.

உலக வரலாற்றில் அரசியலில் ஊடகத்தின் பங்களிப்பு காலத்துக்கு காலம் அதன் பரிணாமம் வேறுபட்டாலும் ஊடகம் இல்லாமல் அரசியல் இல்லை எனும் அளவுக்கு உதாரணங்கள் பல உள்ளன.

இலங்கையை பொருத்தவரை அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு அளப்பரியது அந்த வகையில் அமைச்சர் ரிசாத்தின் அரசியல் வளர்ச்சிக்கு சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது எனலாம்.

அமைச்சர் ரிசாத் பதூதீனை பொறுத்தவரை வானொலி பத்திரிக்கை முகநூல் என பல்துறைகளிலும் அழ பதிந்த தனது காலை தற்பொழுது தொலைகாட்சியின் பக்கம் திருப்பியுள்ளார்.

அந்தவகையில் நேற்று (23) உத்தியோக பூர்வமாக திறக்கபட்டுள்ள உதயம் தொலைகட்சியானது அவரது அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்றால் மிகையாகாது.

எனினும் இன்று இலங்கை முஸ்லிம்களை பொறுத்தவரை தேவையாக இருந்தது முழுநேர முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடிய தொலைக்காட்சியே அனால் அதனை தொடர்ந்தாள்  இலங்கை போன்ற சிறியளவு முஸ்லிம்கள் கொண்ட நாட்டுக்கு வெற்றியை தராது என்பதை கருத்தில் கொண்டோ என்னவோ பல்சுவை நிகழ்ச்சிகளை கொண்ட இஸ்லாமிய கலாச்சாரத்துக்கு முற்றிலும் நேர் எதிரான இந்த தொலைகாட்சியின் ஆரம்பம் முஸ்லிம்களிடம் எந்தளவு வரவேற்பை பெரும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

சமூக சீர்கேடுகள் மலிந்துள்ள இக்காலகட்டத்தில் ஒரு பக்கத்தில் தஉவா அமைப்புக்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டுள்ள அதேவேளை  ஒரு முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறான ஒரு தொலைகாட்சியை ஆரம்பித்துள்ளமையனது சமூகத்தில் எந்தளவுக்கு அவருக்கான வரவேற்பை பெரும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று இளைய சமுதாயத்தினரிடையே ஏற்பட்டுள்ள இஸ்லாமிய இயக்கங்களின் எழுச்சி மற்றும் அது சார்ந்த இயக்கங்களினால் வழங்கபடும்  விப்புணர்வு காரணமாக இளஞர்கள் சமூக ரீதியா நோக்குவதை பார்க்கலாம், எனவே அந்நிய கலாச்சாரத்தை முற்று முழுதாக கொண்ட இப்படியான தொலைகாட்சி முஸ்லிம் சமூகத்திற்கு  என்ன நன்மையை கொண்டு வரபோகின்றது என்பதை அமைச்சர அறியாமலும் இல்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று எவ்வளவோ அத்தியாவசியத் தேவை மார்க்க சம்பந்தமாக உள்ளபோது கோடிகணக்கான பணத்தை முதலீடாக கொண்ட இந்த தொலைகாட்சியை உருவாக்கியதன் நோக்கம்தான் என்ன என்பதை சற்று உற்று நோக்காமலும் இருக்க முடியாது.

 

மேற்குலக இஸ்ரவேலர்களின் மிகவும் நுணுக்கமான வலைபின்னாலே முஸ்லிம் சமூகத்தை அவர்களின் தலைவர்களை கொண்டு வழிகெடுப்பது அந்த வகையிலேயே எமது இளைய சமூகத்தை வழிகெடுக்கும் மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளை கொண்டு நடத்தப்டவுள்ள இந்த தொலைக்காட்சியையும் பார்க்க வேண்டியுள்ளது.

இன்ஷா அல்லாஹ் பொறுத்திருந்து பாப்போம் இலங்கை முஸ்லிம் களுக்கு அமைச்சரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தொலைகாட்சி நன்மை பாக்கப்போகின்றதா அல்லது சமூகத்திற்க்கு சாபமாக போகின்றதா என்பதை.

 

Related posts

மஹிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளராக ரவீந்திர மனோஜ் கமகே நியமனம்

Editor

ஆயுதம் தாங்கியோர் செய்த தவறுக்காக தமிழினத்தை நோகாதீர்! றிசாத் வேண்டுகோள்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் தொடர்பில் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்து

wpengine