பிரதான செய்திகள்

ஊடகங்களை எச்சரிக்கும் பிரதமர் ரணில்

போலி தகவல்களை வெளியிடும் கறுப்பு ஊடகங்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

கறுப்பு ஊடகங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அபராதத்தை செலுத்துவதற்கு காசோலைகளை தயாராக வைத்திருக்குமாறு குறித்த ஊடகங்களுக்கு நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜித் விஜயமுனி சொய்சா உட்பட அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அவ்வாறான பெயர் பட்டியல் ஒன்றை தான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என பிரதமர் கூறினார்.

இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக சிலர் குழுக்களாக செயற்படுவதாக பிரதமர் கூறியுள்ளார்.

அவ்வாறான ஊடகங்களை தான் வெளிப்படுத்துவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அது ஊடக அடக்குமுறை அல்ல என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

வில்பத்து,முசலி பகுதியினை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித்

wpengine

மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் மீண்டும் நிதி அமைச்சின் செயலாளர்

wpengine

யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!

wpengine