பிரதான செய்திகள்

ஊடகங்களினுடாக வெளி வந்துள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது றிப்ஹான்

தான் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களினுடாக வெளி வந்துள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் சகோதரரும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக றிப்கான் பதியுதீன் இன்று மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீனின் சகோதரரான என்னை இன்று காலை இராணுவத்தினர் கைது செய்ததாகவும், பின்னர் விசாரணைக்காக என்னை பொலிஸாரிடம் ஒப்படைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

குறித்த செய்தியை நான் முற்றாக மறுக்கின்றேன். உண்மைக்கு புறம்பாக குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. நான் கைது செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine

மீள்குடியேற்ற செயலணி! பிரதமரினால் நிராகரிக்கபட்ட விக்னேஸ்வரன்.

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor