செய்திகள்பிரதான செய்திகள்

ஊசிமூலம் போதை ஏற்றிய குடும்பஸ்தர் மரணம்..!

யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் நிதுசன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைவஸ்தை உடலினுள் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி இவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றையதினம் (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

மன்னார் -வங்காலை ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்பு: 5பேர் கைது

wpengine

பொதுமக்களின் பாதுகாப்பு டுபாயில் இருந்தே வழிநடத்தப்படுகிறது, பிரபாகரனை கண்டுபிடித்த நாட்டில் இஷாராவை கண்டுபிடிக்க முடியவில்லை.

Maash

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியில் இலங்கைக்கான சவூதி அரேபியாவின் முதலீடு

wpengine