உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உள் விவகாரங்களில் டொனால்ட் ட்ராம்ப் தலையீடு செய்ய மாட்டார்-மஹிந்த

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ராம்ப் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய மாட்டார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது வாழ்த்துச் செய்தியில்…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவானதன் பின்னர் புதிய உலக மரபு ஒன்று உருவாகும் என நம்புகின்றேன்.

உங்களது தெரிவின் ஊடாக அனைத்து நாடுகளினதும் இறையாண்மை சமனிலை மற்றும் அரசாங்கங்களின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாமை போன்ற அடிப்படை கொள்கைகளை பின்பற்றும் ஓர் புதிய உலக மரபினை நாம் எதிர்ப்பார்கின்றோம்.

மேலும் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு குடியரசுக் கட்சி எமக்கு ஆதரவு நல்கியிருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சுயாதீன தொலைக்காட்சி புதிய தொழில்நுட்பத்துடன்

wpengine

பிரித்தானிய அமைச்சரை சந்தித்த இரா.சாணக்கியன்

wpengine

வாலைச்சுருட்டி, வல்லரசுகளை வியக்கவைத்த ஈரானின் வியூகம்!

wpengine