பிரதான செய்திகள்விளையாட்டு

உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றங்கள்- டொம் மூடியின் வழிநடத்தலுக்கமைய

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனைக் குழுவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டொம் மூடியின் வழிநடத்தலுக்கமைய, இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் பணிப்பாளராக, மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் டொம் மூடி நியமிக்கப்பட்டார்.

கடந்த மூன்று வாரங்களாக இலங்கை கிரிக்கெட் தொடர்பில் அவர் கண்காணிப்பு மற்றும் மீளாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பான அறிவிப்பை வௌியிட்டார்.

Related posts

அமைச்சர் றிஷாட் எம்மை சந்தித்த போது எந்த நேரத்திலும் பதவி விலக தயார் என கூறினார்

wpengine

திருமலையில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!

Editor

2017ஆம் ஆண்டு பரீட்டை 12ஆம் திகதி

wpengine