பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படும்!-ஜானக்க வக்கும்புர-

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த ஆலோசனை குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பான யோசனையை முன்வைத்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.  

Related posts

முசலி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீது உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் அழத்தம்

wpengine

பாகிஸ்தான்-இலங்கை முதலீட்டாளர் சங்கம் நிதி உதவி

wpengine

யாழ். விவகாரம்!மாநாட்டிலிருந்து ​அமைச்சர் வெளியேறினார்.

wpengine