உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
உள்ளூராட்சி திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சபாநாயகர் கருஜெயசூரியவும் கையெழுத்திட்டுள்ள நிலையில் வர்த்தமானி அறிவித்தல் வெ ளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளை
அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்தக்கூட்டத்தில் நுவரெலியா அம்பகமுவ உள்ளூராட்சி சபைகளை பிரித்து 6 சபைகளாக உருவாக்குவதென்றும் ஏனைய மூன்று பிரதேச சபைகளை தலா ஒன்றுவீதம் அதிகரித்து 6 சபைகளாக மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்தித்து பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக கட்சிதலைவர்களை உள்ளடக்கிய விசேட கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.