பிரதான செய்திகள்

திருகோணமலையில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அ.இ.ம.கா. கூட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமாகிய அப்துல்லா மகரூப் தலைமையில் திருமலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் முன்னாள் கிண்ணியா நகரபிதா வைத்தியர் ஹில்மி மகரூப், இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரஸாக் (நளீமி), சட்டத்தரணி முகமட் (நளீமி), றமீஸ் ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.நிஸ்மி உட்பட முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் பலத்தினை அதிகரித்தல் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகளை அதிகரிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts

கண்டியில் அமைச்சர் றிஷாட்டின் மயில் கட்சியில் இணைந்த ஐ.தே.க. உறுப்பினர்கள்

wpengine

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்! ஞாபகார்த்த சேவை

wpengine

“முகவரி” கவிதை தொகுப்பினை பெற்றுக்கொண்ட ஹிஸ்புல்லாஹ்

wpengine