பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தும் வகையில் ஜே.வி.பி. தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் ஜே.வி.பி. செயலாளர் நாயகம் டில்வின் சில்வா தரப்பினர் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட டில்வின் சில்வா,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் ஜே.வி.பி. நாடு தழுவிய ரீதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் முதலாவது ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

சுதந்திரக்கட்சிக்குள் காணப்படும் பிளவை சரிசெய்து கட்சியை ஒன்றிணைக்கும் வரை தேர்தலைப் பிற்போடும் உத்தியாகவே வர்த்தமானிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு என்று தெரிவித்துள்ள டில்வின், பொதுமக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் வருடாந்த பரிசளிப்பு விழா;பிரதம அதிதியாக ரணில்

wpengine

மட்டக்களப்பு சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம்

wpengine

காத்தான்குடி பெண்களுக்கான இஸ்லாமிய பாடநெறி நிலைய திறப்பு விழா (படங்கள்)

wpengine