பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் பலர் குற்றவாளிகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்றவாளிகள் இருப்பது தெரியவந்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாடு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடியாளர்கள், போதை மாத்திரை கடத்தல்கார்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர்.

பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட தேடுதலில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ள ஹெட்டியாராச்சி, தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் அவர்களை பற்றி நாட்டுக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய பொலிஸ் மா அதிபரின் உதவியை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாகவும் ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine

சண்முகா பாடசாலை ஆசிரியர் விவகாரம்! யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் கண்டனம்.

wpengine

முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டி வந்தவர் கைது

wpengine