பிரதான செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் முற்றாக நிறுத்தம்!-அரசாங்க அச்சகம்-

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் இதுவரை பணம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக 200க்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இது தொடர்பில் திறைசேரிக்கு மீண்டும் நினைவூட்டல் விடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அச்சு வேலைகள் தொடர்பில் பணம் செலுத்தப்பட வேண்டும் என அச்சகத்தின் தலைவர் கங்கானி கல்பனா லியனகே இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் திறைசேரிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பார்வையிட்ட மன்னார் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்

wpengine

இறைச்சி வாங்குவோரின் கவனத்திற்கு

wpengine

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

wpengine