உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆளும் கட்சியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் விரிவாக பேசப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரத்தை பகிர்தல் உள்ளிட்ட பிரதான சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணங்கியுள்ளதுடன், வரும் நாட்களில் இது தொடர்பில் மேலும் பேசுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தி விரைவில் இறுதி இணக்கப்பாட்டிற்கு வர இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.