பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவது! சுதந்திரத்தை அடக்கும் செயல்

தேர்தல் சட்ட நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துவதற்கான முறையான கோவைகள் என்பன ஒருபோதும் நீதியான செயற்பாடுகளிலிருந்து மீறப்படகூடாது. அவ்வாறு மீறப்படுமானால் அது மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய துரோகச்செயலாகும்.

எனவே உள்ளுராட்சி சபை தேர்தலை துரித கதியில் நடாத்த உதவும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

எவ்விதமான தேவைகளுமின்றி உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவது நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதிக்கும் செயற்பாடெனவும், இது  மக்களின் சுதந்திரத்தை அடக்கும் செயன்முறை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில்  அமைந்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்.

Maash

இன்றைய அரசியலின் யதார்த்தநிலை- பாகம்2

wpengine

தாமரை மொட்டு அபார வெற்றியீட்டும் மஹிந்த! இது எமனின் ஆட்சி

wpengine