பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துங்கள் ஜனாதிபதி உத்தரவு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றப் பின்னரே புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பை நாடாளுமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னர் தான் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல முடியும். இந்த நிலையில், அதற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும்.

ஏனெனில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த இனியும் தாமதித்தால் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்பதால் தேர்தலை உடனயடியாக நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

Related posts

மறிச்சுக்கட்டி பிரச்சினையினை வைத்து அமைச்சர் றிஷாட் பதியுதீனை பற்றி பிழையான தகவல்களை கொடுக்கின்றார்கள்- பா.உ நவவி

wpengine

இன, மத பேதங்களுக்கு அப்பால் நிவாரணங்களை வழங்கிய ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஓர் இனவாதியாகச் சித்தரித்து, அபாண்டங்களை பரப்புவோருக்கு றிஷாட் கொடுத்த சாட்டையடி

wpengine