பிரதான செய்திகள்

உள்ளுராட்சி சபையில் வேலைசெய்யும் ஊழியர்களை கண்டிக்கும் அமைச்சர்

கொரோனா வைரஸ் நாட்டிற்குள் துரிதமாக பரவி வரும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை உள்ளூராட்சி சபையின் பிரதானிகள் உடனடியாக கையாள வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கேட்டுள்ளார்.


இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு மக்களை ஒன்று கூட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


இதனை பின்பற்றாத உள்ளூராட்சி சபை பிரதானிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.


அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நாட்டின் அனைத்து மக்களையும் இந்த நிலைமையில் இருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகவும் முறையாக முன்னெடுக்கப்படும்.


இந்த பயங்கரமான நிலைமையை பெரும்பான்மையான மக்கள் இன்னும் புரிந்துக்கொள்ளாததே ஆபத்தான நிலைமை.
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட கொரோனா வைரஸ் காரணமாக கடும் கஷ்டங்கள் அனுபவித்து வரும் நிலைமையில் எம் போன்ற நாட்டுக்கு ஏற்படக் கூடிய நிலை தொடர்பாக அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் புரிந்துக்கொள்ள வேண்டும்.


இந்த நிலைமையின் கீழ் மிகவும் பொறுப்புடன் செயற்படுங்கள். மக்களை ஒன்று திரட்டுவது கூட்டங்களை நடந்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
உள்ளூராட்சி சபை பிரதானிகளின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்களில் இவ்வாறான நடவடிக்கை தவிர்க்கவும். அவற்றை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.
உள்ளூராட்சி சபை பிரதேசங்களில் துப்பரவு பேணவும். இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் எனவும் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

13வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோகம்! பெற்றோர்களின் பண ஆசை

wpengine

சட்ட ஒழுங்குகள் அமைச்சு சரத் பொன்சேகா வசம்? நாளை முக்கிய அறிவிப்பு

wpengine

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

wpengine