பிரதான செய்திகள்

உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

உள்ளுராட்சிமன்ற தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல் செயலகத்துக்கு முன் மஹிந்த ஆதரவு அணியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

 

தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்க சென்ற போது அவர் இல்லாத காரணத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தலை உடனடியாக நடத்த கோரி தேர்தல் செயலகத்தின் அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.

இதேவேளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணையாளர் நாளை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியாவில் தொழில் சந்தை.

Maash

அமீர் அலியின் முயற்சியினால் கோறளைப்பற்று பிரதேசத்தில் தொழில்நுற்ப கல்லுாரி

wpengine

உயர் சபையில் அப்பட்டமான பொய்களை பேசும் சார்ள்ஸ் நிர்மலநாதன் பா.உ

wpengine