பிரதான செய்திகள்

உல்லாச பிரயாணிகளுக்காக கோறளைப்பற்று பகுதியில் விற்பனை நிலையம்

(அனா)

கிழக்கு மாகாணத்தில் உல்லாச பிரயாணிகளின் வருகையை கருத்திற் கொண்டும் சிறு கைத்தொழிலாளர்களின் தொழில் முயற்சியை முன்னேற்றும் முகமாகவும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உற்பத்தியாளர் சங்கத்தினால் “பாசிககுடா” என்ற பெயரில் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்படடது.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள இவ் விற்பனை நிலையத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள அனைத்து சிறு கைத்தொழிலாளர்களது உற்பத்தி பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று உற்பத்தியாளர் சங்க தலைவி திருமதி மெத்தியூஸ் தெரிவித்தார்.unnamed (5)

கோறளைப்பற்று உற்பத்தியாளர் சங்க தலைவி திருமதி மெத்தியூஸ் தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வில் அதிதிகலாக கோறளைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன், உலக தரிச நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் சாரா, உலக தரிசன நிறுவனத்தின் வலய முகாமையாளர் ரமேஸ்குமார், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.unnamed (4)

விற்பனை நிலைய கட்டிடத்திற்கு உலக தரிசன நிறுவனம் பதினைந்து லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது. unnamed (6)

Related posts

பள்ளிவாசல்களில் ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்க வேண்டும்.

wpengine

ரஷ்யாவில் விரைவில் பேஸ்புக் தடை

wpengine

இரண்டு கோடி கஜமுத்துக்களுடன் கண்டியில் நால்வர் கைது.

wpengine