உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலக மக்களிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயருக்கு பாகிஸ்தானியர்களே! காரணம்

உலக மக்களிடம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயருக்கு பாகிஸ்தானியர்களே காரணம் என அந்த நாட்டை சேர்ந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா கூறியுள்ளார். வீடியோ ஒன்றில் இந்த குற்றச்சாட்டை எந்தவித தயக்கமும் இன்றி  மலாலா முன் வைத்துள்ளார். இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள பாகிஸ்தான் அந்த மதம் காட்டும் போதனைகளை பின்பற்ற தவறிவிட்டது என்பது மலாலாவின் குற்றச்சாட்டு. பாகிஸ்தானுக்கும், அதை சார்ந்துள்ள இஸ்லாம் மதத்திற்கும் சொந்த நாட்டு மக்களே அவப்பெயரை தேடி தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாம் என்றால் அமைதி என்று கூறியுள்ள மலாலா அது காட்டும் நாகரீகத்தையும், வழிமுறைகளையும், பாகிஸ்தானியர்கள் காலில் போட்டு மிதித்துள்ளனர் என்று காட்டமாக கூறியுள்ளனர்.

அமைதி மற்றும் சகிப்பு தன்மையை வலியுறுத்தும் இஸ்லாம் மதம் பற்றி இனியாவது பாகிஸ்தானியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். பஷால் கான் என்ற மாணவரை கல்லூரி வளாகத்தில் வன்முறை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றது. இதன் பின்னணியில் வீடியோ செய்தி மலாலா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

போதை பொருளுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் தாயை கொலை செய்த மகன் .

Maash

மன்னார்-அடம்பனில் கட்சி காரியாலயத்தை திறந்த றிஷாட் (படம்)

wpengine

சட்டவிரோத மணல் கொள்ளை! 125000ரூபா தண்டப்பணம்

wpengine