பிரதான செய்திகள்

உலக சாதனைக்காக நடனமாடும் இளைஞன்

பொகவந்தலாவை, கொட்டியாகலை மத்திய பிரிவில் வாழ்ந்து வரும் தயாபரன் எனும் இளைஞன் 10 நாட்கள் தொடர்ந்து நடனம் ஆடி உலக சாதனை படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்.

இதன் முன்னோடியாக  24 மணித்தியாலம் தொடர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை காலை 11 மணிக்கு பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான மண்டபத்தில் நடனத்தை ஆரம்பித்த இளைஞன், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 11 மணி வரை தொடர்ந்து நடனமாடி வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.

இம் முறை தொடர்ந்து 10 நாட்கள் நடனம் ஆடுவதற்கான முன்னோடியாகவே இந்த 24 மணித்தியால தொடர் நடன நிகழ்வை இவர் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நடன நிகழ்வு பொகவந்தலாவை பொலிஸ் மற்றும் முக்கிய அரச பிரமுகர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

குறித்த இளைஞன் ஏற்கனவே இலங்கையில் ஐந்து நாள் தொடர்ந்து நடனமாடி சாதனை படைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் இரு மாணவர்கள் முதலாமிடம்

wpengine

ஓட்டமாவடிக் கோட்டத்தில் அரசியல் மயப்பட்டுப்போன கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம்

wpengine

ஊழல் மோசடி இரண்டு அமைச்சர்கள் அச்சத்தில்

wpengine