பிரதான செய்திகள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,253 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதத்தில் 3 வாரங்களாக தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் எற்படாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் வாரத்தில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1,218 டொலரில் இருந்து 1,253 டொலராக அதிகரித்துள்ளது.

35 அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது 2 வீத அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம் ஆகும்.

Related posts

எரிபொருள் வழங்கல் முறைகேடுகளினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு-ரிஷாட்

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பான் கீ மூனை சந்தித்துப் பேச்சு

wpengine

“அஸ்ரப் சிஹாப்தீன்” எனும் இலக்கிய ஆளுமை. (“Ashraf cihaptin” the literary personality.)

wpengine