Breaking
Fri. Nov 22nd, 2024

உலகின் சிறந்த ஆசிரியருக்கான விருதை பிரித்தானியாவைச் சேர்ந்த Andria Zafirakou என்ற பெண் பெற்றுள்ளார்.

உலகின் தலைசிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது துபாயைச் சேர்ந்த வர்க்கி அறக்கட்டளையின் வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பிரித்தானியாவைச் சேர்ந்த Andria Zafirakou என்ற பெண் ஆசிரியர் தட்டிச் சென்றுள்ளார்.

துபாயில் நடைபெற்ற விழாவில் குறித்த பெண்ணுக்கு விருதுடன் சேர்த்து 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை பெற்றுள்ள பெண், பிரித்தானியாவின் Alperton சமூக கல்லூரியில் கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆசிரியர் பணியை கடந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருந்த அவர், பொலிசாருடன் இணைந்து மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல சேவைகளை செய்துள்ளார்.

மட்டுமின்றி, மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதற்காக தற்காப்பு கலை, பாக்சிங் போன்ற கலைகளை பயிற்றுவிக்க தனி பாடசாலையும் நடத்தி வருகிறார். இவருக்கு சரலமாக 30 மொழிகளில் பேச தெரியும்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“அனைத்து மாணவர்களுக்கும் உரிய கல்வி கிடைக்க வேண்டும். அதுவே என் லட்சியம்” என கூறியுள்ளார்.
இந்த விருதை பெறும் முதல் பிரித்தானிய பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *