கட்டுரைகள்பிரதான செய்திகள்

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?  

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

 

மூன்றாவது தொடர்…………

 உமர் (ரழி) அவர்களின் ஆட்சியிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகின் பல பாகங்களிலும் விஸ்தரிக்கப்பட்டது. ஐரோப்பா, வட ஆபிரிக்கா, வட ஆசியா கண்டங்களுக்கு இஸ்லாம் பரவச்செய்து, உலகில் இஸ்லாமிய ஆட்சி அதிகார எல்லை விரிவு படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக உமய்யா கலிபாக்கள் என்று அழைக்கப்பட்ட முஆவியா (ரழி) அவர்கள் தொடக்கம் மர்வான் இப்னு முஹம்மது வரைக்கும் 661  ஆம் ஆண்டு தொடக்கம் 750 ஆம் ஆண்டு வரைக்கும் இஸ்லாமிய பேரரசை ஆட்சி செய்தார்கள்.

பின்பு 750 ஆம் ஆண்டு தொடக்கம் 1517 ஆம் ஆண்டு வரைக்கும் பாக்தாத், கெய்ரோ ஆகிய நகரங்களை தலைமையமாக கொண்டு முறையே முதலாம் அப்பாசிய கலீபாக்களும், பின்பு இரண்டாம் அப்பாசிய கலீபாக்களும் ஆட்சி செய்தார்கள்.

1517 இல் துருக்கியை மையமாக கொண்டு கலீபா சுல்தான் சலீம் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய கிலாபாவாக உஸ்மானியா சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது.

உலக நாடுகளை கைப்பேற்றி அதன் வளங்களை சுரண்டித்திரிந்த இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள், இஸ்லாமிய நாடுகளை கைப்பெற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டதானாலும், ஐரோப்பாவில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துவதனை பொறுத்துக்கொள்ள முடியாததனாலும், உலகில் கட்டுக்கோப்பான பலம்வாய்ந்த இஸ்லாமிய பேரரசை சிதைவடயச் செய்வதற்கு பல சூழ்ச்சிகளையும், தந்திரோபாயங்களையும் மேற்கொண்டனர்.

அந்த வகையில் உஸ்மானியா சாம்ராஜ்யத்தின் இறுதி கலீபாவான 6 ஆம் முகம்மத் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இடையில் மொழி ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், மத கோட்பாடுகள் ரீதியாகவும் பிளவுகள் உண்டு பண்ணப்பட்டதனால், உள்ளக இராணுவப் புரட்சி மூலம் இஸ்லாமிய உஸ்மானியா சாம்ராஜ்யம் 1922 இல் சிதைவடைந்தது.

எனவே உலகில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மீண்டும் நிறுவப்பட்டுவிடக் கூடாது என்று தீர்மானித்த அன்றைய வல்லரசான இங்கிலாந்தும், அதன் தோழமை நாடுகளும், இஸ்லாமிய நாடுகளை அதிகரிக்கச் செய்வதன் மூலம் அவர்களிடம் ஒற்றுமை இருக்காது என்று உணர்ந்ததனால், தங்களுக்கு கட்டுப்பட்டவர்களை ஆட்சியாளர்களாக கொண்டு புதிய புதிய இஸ்லாமிய நாடுகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தார்கள்.

அத்துடன் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் வகையிலும், இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் இந்த நாடுகள் மீண்டும் ஒற்றுமைப்படாமல் இருப்பதனை கண்காணிக்கும் வகையிலும், இஸ்லாமியர்களின் பூர்வீக பூமியான பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்து  அல்லாஹ்வினால் சபிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் பரம எதிரியான யூதர்களை உலகெங்கிலும் இருந்து குடியேற்றி, இஸ்ரேல் என்னும் நாட்டை இங்கிலாந்தின் பூரண அனுசரணையுடன் உருவாக்கினார்கள்.

ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் அவர்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பெருமளவான யூதர்களை ஹிட்லர் கொன்று குவித்தார். அதனால் ஜெர்மனியில் வாழ்ந்துவந்த பெருமளவான யூதர்கள் அகதிகளாக சென்று பாலஸ்தீன் மண்ணில் குடியேற்றுவதற்கு சாதகமான ஒரு சூழ்நிலை தோன்றியது. அன்றைய சூழ்நிலையில் அவர்கள் மீது ஏற்ப்பட்ட பரிதாபம் காரணமாக பாலஸ்தீனில் யூதர்களை குடியேற்றுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

எனவே 1922 உடன் சிதைவடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் எகிப்தை மையமாக கொண்டு ஹசனுள் பன்னா அவர்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினை உருவாக்கி ஜனநாயக வழியில் செயட்பாட்டை ஆரம்பித்தார். ஆனால் அவர் சிறையிலடைக்கப்பட்டு அடக்கப்பட்டார். அதுபோல கிலாபத்துக்கான ஜனநாயக ரீதியிலான பலமுயற்சிகள் அவ்வப்போது சியோனிஸ்டுக்களின் சூழ்ச்சிகளினால் முறியடிக்கப்பட்டது.

இதன்பின்பு ஒசாமா பின் லாதின் தலைமையில் அல் கைதா அமைப்பு ஆயுத போராட்டம் மூலம் உலகில் இஸ்லாமிய கிலாபத்தினை மீண்டும் நிறுவும் நோக்கிலும்,  அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், உலகின் பல நாடுகளில் ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்தார்கள்.

2001 செப்டம்பரில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இதனை சாட்டாகவைத்து பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் தனக்கு கட்டுப்பட மறுத்த இஸ்லாமிய நாடுகளை ஒவ்வொன்றாக அழித்து நிர்மூலமாக்கும் பணியில் அமெரிக்கா களம் இறங்கியது.

தொடரும்…………………..

Related posts

குத்தாட்டம் போட ரெடியான முதல்வர்: தடுத்து நிறுத்திய மனைவி

wpengine

காணாமல்போனவர்கள் ஆணைக்குழு; சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம் எதிர்ப்பு

wpengine

முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் தேவை! தனவந்தர்கள் முன்வர வேண்டும்-அமைச்சர் றிஷாட்

wpengine