ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவால், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை சட்டரீதியற்றது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள 99 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்வதாக நேற்று கூடிய ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்தது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்,
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவே ஐக்கிய மக்கள் சக்தி அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே அதன் உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் சட்ட நடவடிக்கை எடுக்கமு டியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக்கியதும் பிரதமர் வேட்பாளராக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவாகும் என்றும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.