யாழ் உரும்பிராய் யோகபுரம் ஆதி பராசக்தி அம்பாள் ஆலயத்திற்கு அருகிலுள்ள முன்பள்ளியில் அறநெறிப் பாடசாலை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி அறநெறி பாடசாலையினை நடாத்துவதற்கு ஒரு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவம் நேற்று காலை (04.03.2017) நடைபெற்றது.
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நம்பிக்கை நிதியத்தினாலும், உரும்பிராயைச் சேர்ந்த லண்டனில் வாழுகின்ற அபிமானிகளாலும் மேற்படி அறநெறி பாடசாலைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நிதிப் பங்களிப்பு செய்யப்படவிருக்கின்றது.