பிரதான செய்திகள்

உரிய தகுதி உடைய அதிபர்கள் நியமிக்கப்படும் -அகில விராஜ்

உரிய தரத்தையுடைய அதிபர்கள் இல்லாத அனைத்து பாடசாலைகளினதும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உரிய தரமுடைய அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

அதற்காக அனைத்து மாகாண சபை, மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவினதும் ஒத்துழைப்புடன் அமைச்சரவை அனுமதியை விரைவில் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற அதிபர் நியமன நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தான் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அனைத்து அதிபர்களுக்கும் அவர்களின் தொழில் தகைமைக்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற்ற தொழிநுட்ப அதிகாரி கைது

wpengine

அமைச்சர் ஜோன் அமரதுங்க கைது செய்யப்பட வேண்டும்: சிங்ஹல ராவய

wpengine

வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட ஷிப்லி பாறூக்

wpengine