பிரதான செய்திகள்

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு சஜின் வாஸ்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு அமைச்சராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொண்டுள்ளார்.


காலி அம்பலங்கொடவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார மேடையில் சஜின் வாஸ் குணவர்தன கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.

உயிர் இருக்கும்வரை சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் இதன்போது உறுதி செய்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளிலும் அண்மை நாட்களாக கட்சி தாவல்கள் அதிகமாக இடம்பெற்றுவதை காணமுடிகின்றது.

Related posts

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

wpengine

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Editor

இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம்.

wpengine