Breaking
Sun. Nov 24th, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் தான் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாகவும், அவருடன் தொடர்புடைய 14 கோப்புகளை பராமரித்து வந்ததாகவும் முன்னாள் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹசீமை கைது செய்ய தான் கடந்த 2018 ஆம் ஆண்டு திறந்த பிடியாணையை பெற்றிருந்த போது அவரை கைது செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா சாட்சியம் ஒன்றை வழங்குவதற்காக நேற்று (08) பிற்பகல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2014 ஆண்டு அரச புலனாய்வு சேவையின் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினை தனக்கு வழங்கிய பின்னர் முதலாவதாக இஸ்லாம் அடைப்படைவாதம் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும், இதன்போது மாளிகாவத்தை பிரதேசத்தில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றுப் பாதையில் பயணித்த அப்துல் ராஷிக் என்ற நபர் தொடர்பில் தெரியவந்ததாகவும் அவர் சாட்சியம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், அப்துல் ராஷிகினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் இணைந்திருந்த, காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபரான சஹ்ரான் ஹசீமை அரச புலனாய்வு சேவை கடந்த 2014 ஆம் ஆண்டு இனங்கண்டிருந்ததாக நாலக டி சில்வா தௌிவுபடுத்தினார்.

2017 ஆண்டில் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து வந்த ´வலிஉல்லா´ என்ற அமைப்பொன்று தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் வன்முறை நடத்தை குறித்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் குறித்த குழுவை தன்னிடம் அனுப்பி வைத்ததன் பின்னர் அது தொடர்பில் விசாரணையொன்றை ஆரம்பித்ததாக நாலக டி சில்வா ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *