பிரதான செய்திகள்

உயிர்களை வேட்டையாடும் காட்டுமிராண்டிகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

மன நிம்மதிக்காகவும் அமைதிக்காகவும் ஒன்றுகூடும் புனிதத் தலங்களில் மனித உயிர்களை வேட்டையாடும் காட்டுமிராண்டிகளை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் மேலும்,

ஆயுதங்களால் எதையுமே சாதிக்க முடியாது. மதத்தலங்களுக்குள் மனிதநேயமும், கருணையும் தொலைக்கப்படுவது மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.

அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாய் கொடூரமான முறையில் பலியாவதன் மூலம் கொலையாளிகள் எதனையும் அடைய முடியாது.

இன்றைய நாள் கத்தோலிக்க சகோதரர்களின் பண்டிகை நாள். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி ஆராதனையில் அவர்கள் இருந்த வேளையில் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் அட்டகாசம் புரிவதை மனித சமுகம் மன்னிக்காது.

இந்த நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் கறைபடிந்த நாளாகும். உயிரிழந்த அனைவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹக்கீம் கல்முனை முஸ்லிம்களிடம் கேட்பது படு முட்டாள்த்தனமானதாகும்

wpengine

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

Editor

அ.இ.ம.கா.கட்சியின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறி

wpengine