செய்திகள்பிரதான செய்திகள்

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை பகிடிவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வெள்ளிக்கிழமை (16) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயின்ற சரித் தில்ஷான் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தான் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருந்தார்.

இருப்பினும், அவரது உறவினர்களும் நண்பர்களும், பல்கலைக்கழகத்தில் நிலவும் பகிடிவதை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சுமத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

வவுனியாவில் மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு 20ஏக்கர் காணி மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டாம்! வீதிக்கு வந்த பெண்கள்

wpengine

இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டு

wpengine