பிரதான செய்திகள்

உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச அனுதாபம்.

கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.

கிண்ணியாவில் இன்று காலை இழுவைப்படகு மூழ்கி விபத்திற்குள்ளானதில் பெருமளவானவர்கள் உயிரிழந்தனர்.

இதன் பிறகு கிண்ணியா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பதற்ற நிலை உருவானது.

அத்துடன், கிண்ணியா பிரதேச வியாபார நிலையங்கள் மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அனுதாபம் தெரிவித்து பதிவொன்றினை இட்டுள்ளார். 

இன்றைய கிண்ணியா படகு விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் வேதனையுற்றேன் எனவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

 பகிரங்க வெளியில் மன்னிப்பு கேட்பதற்கு ஒரு நாள் அவகாசம்..!

Maash

நுளம்புகளை விரட்டும் புதிய மருந்து

wpengine

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரவூப் ஹக்கீம்

wpengine