உயர்தர பரீட்சையில் 3 சித்தியடைந்தவர்களும், சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடம் சித்தியடைந்தவர்களும் தாதியர்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரியவந்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளரும், உப தலைவருமான பாலசிங்கம் சிவயோகம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வடமாகாணத்தில் உயர்தரப் பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதம் உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்தவர்களும்,சாதாரண தரப்பரீட்சையில் தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.
தூதியராக விரும்புபவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை தாதிய சங்கத் தலைவர் பாலசிங்கம் சிவயோகம் 0713526234 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், shivajokam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக 18 வயது முதல் 28 வயதுடைய தாதிய பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பியவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.