பிரதான செய்திகள்

உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலைகள்

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை மொத்த விற்பனை மரக்கறி சந்தைக்கு மரக்கறி வகைகள் விநியோகம் செய்வது குறைந்துள்ளது.

இதனால் மரக்கறி வகைகளின் விலை சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

மலைநாட்டு மரக்கறி வகைகள் 40 வீதத்தினாலும், தாழ் நிலப்பகுதி மரக்கறி வகைகள் 20 வீதத்தினாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சில மரக்கறி வகைகளின் மொத்த விற்பனை விலை வருமாறு,

  • ஒரு கிலோ போஞ்சி 140 ரூபா
  • ஒரு கிலோ கத்தரிக்காய் 140 ரூபா
  • ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபா
  • ஒரு கிலோ கறி மிளகாய் 240 ரூபா
  • ஒரு கிலோ தக்காளி 70 ரூபா
  • ஒரு கிலோ கோவா 110 ரூபா
  • ஒரு கிலோ கரட் 270 ரூபா என்ற அடிப்படையில் தம்புள்ள மரக்கறி சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறி செய்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரக்கறி வகைகளை சந்தைக்கு விநியோகம் செய்வதிலும் பயிர்ச்செய்கையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் சில பகுதிகளில் மரக்கறி வகைகளின் விலைகள் பாரியளவில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முல்லைத்தீவு மக்களே! சுனாமி ஒத்திகை பயம் வேண்டாம்.

wpengine

அசாத் சாலியை இறக்குமதி செய்யவில்லை.

wpengine

ISIS இயக்கத்தை உருவாக்கியவர் ஒபாமாவா?

wpengine