கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சை விதிமுறைகளை மீறி மோசடியில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கமைவாக அவர்கள் அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு பரீட்சையில் தோற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை 2230 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன.. இம்முறை 3 லட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 2 இலட்சத்து 37 ஆயிரத்தி 943 பாடசாலை பரீட்சார்த்திகளும் 77 ஆயிரத்து 284 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் தோற்றுவதற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.