பிரதான செய்திகள்

உப தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள யூ.எல்.அஹமட் லெப்பை

தனது உப தவிசாளர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட நான், சுமார் மூன்று வருடங்களாக என்னால் முடிந்த பணிகளை மக்களுக்கு செய்துள்ளேன்.

“கட்சிக்கு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, இம்மாதம் இடம்பெறவுள்ள சபை அமர்வில் நான் இராஜினமா செய்யவுள்ளேன்.

“எனது இராஜினாமாவுக்குப் பின்னர் இடம்பெறவுள்ள வெற்றிடத்துக்கு எமது கட்சியில் மாஞ்சோலை பகுதியில் போட்டியிட்ட ஏ.எச்.நுபைல் என்பவர், பிரதேச சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்படவுள்ளார்” என்று யூ.எல்.அஹமட் லெவ்வை மேலும் தெரிவித்தார்.

Related posts

கிழக்கில் பலமடையும் முஸ்லிம் கூட்டமைப்பு: ஓட்டம் பிடிப்பாரா ஹக்கீம்?

wpengine

பர்தா அணியும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள் மீது சிலர் காழ்ப்புணர்ச்சி

wpengine

விவசாயிகளுக்கு இன்று முதல் டோக்கன் மூலம் எரிபொருள்

wpengine