(அஷ்ரப். ஏ. சமத்)
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமக்கென்று ஒரு வீடு இல்லாமல் வாழும் அரச ஊழியா்களுக்கான உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” நிர்மாணிக்கப்பட உள்ளது. என அமைச்சா் சஜித் பிரேமதாச இன்று(2) தெரிவித்தாா் .
நாட்டில் உள்ள 25 மாவட்டங்களிலும் அரச ஊழியா்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வட்டியில் வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும். இதற்காக நாடு புராவும் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்கள் உரிய நடவடிக்கை எடுக்கும். அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபா் ஊடக அரச ஊழியா்களுக்கான் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச காணிகள் அடையாளம் ்காணப்படும்.
மேற்கண்டவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச இன்று (2) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அழுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்ட தகவலைத் தெரிவித்தாா்.
அங்கு அவா் தொடா்ந்து தகவல் தருகையில் சிரச தொலைக்காட்சி கிரமாங்களது குறைபாடுகள் மற்றும் ஊடகவியலாளா்கள் பத்திரிகைகளில் வீடற்று தெருவில் வாழும் குடும்பங்கள் பற்றி தெரிவிக்கும் சம்பவங்களை உடன் இனம் கண்டு அந்த குடும்பங்களை அமைச்சுக்கு அழைத்து வீடுகள் நிர்மாணிக்க 2 இலட்சம் வழங்கப்பட்டு வருகின்றது.
இன்று புதன்கிழமை இரததினபுரியில் வீடு இல்லாமல் வாழ்ந்த குடும்பமென்றின் கதை லங்கா தீப பத்திரிகையில் வெளியீடப்பட்டிருந்தது. அக்குடும்பத்தினை அழைத்து அமைச்சா் வீடமைப்பு கடன் 2 இலட்சம் ருபாவை வழங்கி வீட்டினை ஒரு மாதத்திற்குள் நிர்மாணிக்கும்மாறு அதற்காக இரத்தினபுரி மாவட்ட முகாமையாளா் உதபுவாா் எனவும் தெரிவித்தாா்.