பிரதான செய்திகள்

உதய கம்மன்பிலவுக்கு ஆதரவாக வாக்களிக்க மஹிந்தவை சந்தித்த முஸ்லிம் சோனிகள்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரச நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு கடந்த 18ம் திகதி இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் ஆகியோருடன் வெளியேறியதை காணமுடிந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சியில் இருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமரை நேற்று இகசியமாக சந்தித்து பேசியுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Related posts

கூட்டமைப்புக்காக அரசியல் செய்யப்போகும் மன்னார் ஆயர்

wpengine

அனுராதபுரத்தில் வைத்தியா்கள் இருவருக்கு இடையில் மோதல்!

Editor

பாடசாலை ஆசிரியரின் நடவடிக்கையினால் மாணவி தற்கொலை

wpengine