பிரதான செய்திகள்

உதய கம்மன்பில,முஸ்ஸமில் தொடர்பில் பெங்கமுவே நாலக தேரர் கருத்து

பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர், உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸ்ஸமில் ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற இரண்டு ஊடக சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கம் முகம்கொடுத்துள்ள நெருக்கடி நிலையை மறைப்பதற்கு இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெவித ஹன்ட அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பிரதிநிதி பெங்கமுவே நாலக தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸமில் கைது செய்யப்பட்டமை, சுதேசத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சேபனை காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் நகரசபை பண்டிகைக்கால கடை வழங்கியதில் ஊழல் : நகரசபை முதல்வர் டானியல் வசந்தன்.

Maash

124 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

wpengine

பதவியை தட்டில் வைத்து தாரைவார்த்துக் கொடுப்பதற்கு தயார்: பேராளர் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்

wpengine