பிரதான செய்திகள்

உடல் எடையை குறைக்க முடியுமே! அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையால், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் எடையை மாத்திரமே குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையால் எதுவும் மாற்றமடைய போவதில்லை. அதற்காக அரசாங்கம் பீதியடைவதற்கும் ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று (30) கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த பாதயாத்திரையால் ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள போவதில்லை. இன்னும் 5 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் பிளவுப்பட போவதுமில்லை.

எனவே குறித்த பாதையாத்திரை தொடர்பில் பீதியடைவதற்கு ஒன்றும் இல்லையென தெரிவித்தார்.

Related posts

அரச கரும மொழி தேர்ச்சி! அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

wpengine

கீத் ராத் 35 ஆவது இசை நிகழ்ச்சி

wpengine

இரண்டாம் தவணை கணிதப் பாட பரீட்சை வினாத்தாள் கசிவு!

wpengine