பிரதான செய்திகள்

உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

மாகாண ஆளுனர்களை உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளார்.

இன்றைய தினத்திற்குள் மாகாண ஆளுனர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆளுனர்களில் சில மாற்றங்களைச் செய்யும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார் என சில மாகாண ஆளுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் பதவியை ராஜினாமா செய்யுமாறு தமக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

Related posts

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

wpengine

உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளியது! இலங்கை

wpengine

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine